06 May 2024

"உடையார்" - பாலகுமாரன்.

ஆட்சி:  சோழர்கள்
காலம்: 9 - 10ஆம் நூற்றாண்டு
கதாபாத்திரங்கள்: இராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன், பஞ்சவன்மாதேவி முதலியோர்.
பாகங்கள்: 6
தகவல்:  பொன்னியின் செல்வன் முற்று பெற்ற இடத்திலிருந்து உடையார் தொடங்குகிறது. 

தமிழ்நாட்டின் ஒர் அடையாளமாக நிற்கும் தஞ்சை பெரியகோயில் , ஒர் தனி மனித எண்ணங்களில் தோன்றி எப்படி சோழ மண்ணில் கம்பீரமாக உருக்கொண்டது என்ற வரலாற்றை கூறுகிறது இந்த உடையார் நூல்.

இதில் உடையாராக போற்றப்படும் இராஜராஜசோழன் கோயில்கட்டுவதற்கான காரணம் , கடந்த தடைகள், மக்களுக்குள் வந்த குழப்பங்கள், மகன் இடையே கருத்துவேறுபாடுகள் ,கோயில் கட்டுவதனால் பெருகிய பொருளாதாரம், செல்வத்துக்காக செய்த  போர் , கட்டிடக்கலை நுணுக்கங்கள், சிற்பிகளின் திறமைகள் என பல பரிமாணங்களில்  தனது ஆராய்ச்சியை கொண்டு 6 பாகம் கொண்ட வரலாற்றுக் காவியமாக படைத்துள்ளார் திரு.பாலகுமாரன் அவர்கள்.

இதில் பொன்னியின் செல்வனைபோல் அல்லாது  முற்றிலும்  வரலாற்று சம்பவங்களையும், பாத்திரங்களையும் கொண்டு காவியத்தை படைத்ததாக   பாலகுமாரன் அவர்கள் கூறுகிறார்.

ஆக்கம்
Ashwin, Ram & Smruthi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி