17 Oct 2021

செற்றை (செத்தை) - 1. Eco waste 2. A small freshwater fish

செத்தை  என்பது செற்றை என்ற  சொல்லில் இருந்து நாளடைவில் மருவியது . ஒற்றை என்ற சொல் ஒத்தை  ஆனதுபோல் .  

மறிய, குளகு அரை யாத்த குறுங்கால் குரம்பை செற்றை வாயில் செறிகழிக் கதவின் –  

                                                                     பெரும்பாணாற்றுப்படை
                                                                         
மறி  என்றால் ஆடு , குளகு  என்றால் இலை , அரையாத்த குறுங்கால் என்றால் இடுப்பளவு உயரமுள்ள கம்பு . இடுப்பளவு கம்பில் இலையை கட்டினால் தான் ஆடு முயற்சி செஞ்சு சாப்பிடும் இல்லை என்றால் மிதித்து வீணடிக்கும் . கம்பில் இருக்கும் இலை தழைகளை உண்ணும் போது வீட்டு வாசலில் சிதறிக்கிடந்த  இலை தழை மிச்சம்  செற்றை என்று  குறிப்பிடப்பட்டுள்ளது .

When  leaves (food for goat) are tied to a stick which is at the hip level (exactly the height where the goat could reach for it), the goat tries to eat it, and while eating there are wasted leaves and plant waste that are scattered around and this  is referred to as setthai (settrai) 

சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த பருத்திப்
பெண்டின் சிறுதீ விளக்கத்து –                                                                 


                                                                         
 புறநானூறு

சிறை என்பது பருத்திக்காய் மேல் தோல் . செற்றை என்பது அது உடைந்தால் வரும் தூசி .
ஒரு  பருத்தி  நூல் திரிக்கும் பெண், காலையில் எழுந்தவுடன் விளக்கேற்றி சுத்தம் செய்யும் போது அங்குள்ள பருத்திக்காய் மற்றும் தூசி  சுத்தம் செய்வதுபோல் உள்ள காட்சி புறநானூற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ளது .

When a woman who sews cotton wakes up in the morning, lights the lamp and cleans the cotton seeds and the waste that comes out of the cotton seeds,

செத்தையேன் சிதம்ப நாயேன்; செடியனே னழுக்குப் பாயும் பொத்தையே போற்றி நாளும் புகலிட மறிய மாட்டே

                                                                          
                                                                              தேவாரம்
திருநாவுக்கரசர் - மனிதனை  ( தன்னை) குப்பை என்று குறிப்பிடுகிறார். செத்தை  என்பது இங்கு பயனற்ற  குப்பை என்று பொருள்.  

Thirunavukarsar refers to humans in general as useless garbage. The word "setthai" here means its unwanted waste.

செற்றை வரும்பழ னஞ்சோலை யிஞ்சி திகழ்வரைமேற்

     
                                                                         கந்தர்  அந்தாதி
செற்றை எனும் மீன் இனம் திகழ்கின்ற வயல்கள் ,பூஞ்சோலைகள் என்று பொருள்.
The fields and marshlands which is filled with Setrai ( freshwater fish)
ஆக்கம்
Thamizhsuvadi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி