15 Aug 2021

இவரைத் தெரியுமா?

  • மகாத்மா காந்தி  தான் தமிழ் கற்க, இவரை ஆசானாக ஏற்க விரும்பினார்.

  • அவரது படைப்புகளைப் பாராட்டி மகாகவி பாரதியார் மற்றும் ரபிந்திரநாத் தாகூர் பாடல்களை இயற்றியுள்ளனர் .

  • தமிழ் ‘செம்மொழி’ என்ற நிலை பெற இவர் பல ஆதாரங்களை  திரட்டியுள்ளார்.

  • சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை (3/5 பெரும்காப்பியங்கள் )  ஏட்டுச்சுவடிகளை அச்சிடப்பட்ட புத்தகங்களாக மாற்றியவர்.

  • அழிவின் விளிம்பில் இருந்த புறநானூறு, பத்துப்பாட்டு   மற்றும் பல சங்க இலக்கியங்களுக்கு  பதிப்பின் மூலம் மறுபிறப்பு கொடுத்தவர்.

  • இவரை   "தமிழ்த் தாத்தா"  என்று அன்புடன் முதலில் அழைத்தவர்  கல்கி கிருஷ்ணமூர்த்தி.

  • பெசன்ட் நகரில் உள்ள நூலகத்திற்கு இவர் பெயர் வழங்கப்பட்டுள்ளது .

...

...

...

இவர் உ. வே. சாமிநாதன் அவர்கள்
(1855 -1942) . இவர் ஒரு தமிழ் ஆசிரியர், அறிஞர் மற்றும் பதிப்பிட்டாளர்/வெளியீட்டாளர். அவர் தனது குழந்தைப் பருவத்தில் தந்தையிடமிருந்து இசையைக் கற்றுக் கொண்டார் மற்றும் பல ஆசிரியர்களிடமிருந்து “திண்ணை பள்ளி ” மூலம் கல்வி பெற்றார். 

தனது வாழ்நாள் முழுவதும், சுமார் 3000  ஏடு பிரதிகளை சேகரித்து 90 புத்தகங்களை வெளியிட்டார். அவர் முன்னுரை, அகராதி, அடிக்குறிகள் , மேற்கோள் குறிப்புகள்  போன்ற துணை நிரல்களுக்காகவும்,
 
வெவ்வேறு பிரதிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், வர்ணனைகளை ஒப்பிடுவதன் மூலம், புத்தகத்தை அவர் தொகுத்த விதம், எளிமைப்படுத்தல் போன்றவைகளால் மற்ற பதிப்பிட்டாளர்களிடமிருந்து தனித்து நின்றார்.

அவர் பதிப்பித்த சங்க இலக்கிய நூல்கள் :
சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை , புறநானுறு, பத்துப்பாட்டு  , ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், குறுந்தொகை மற்றும் பல.

அவர்எழுதிய  நூல்கள்:
“என் சரித்திரம்” (சுயசரிதை)  , நல்லுரைக்கோவை (கட்டுரைகள்) , குளத்தங்கரை அரசமரம் (தமிழின் முதல் சிறுகதை) மற்றும் பல.

மேலும் உ.வெ.சா பற்றி  அறிந்துக்கொள்ள
உ.வெ.சா பற்றி  முனைவர் ப.சரவணன் தமிழியல் ஆய்வாளர்.

உ.வெ.சா பற்றி வைரமுத்து கட்டுரை

ஆக்கம்
Ashwin, Ram & Smruthi

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி