18 Sep 2022

அஞ்சிலே ஒன்று - அனுமன்

கம்பராமாயணம் 

அஞ்சிலே ஒன்று பெற்றான்; அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்; அவன் எம்மை அளித்துக் காப்பான்




கம்பர் அனுமனை பற்றி பாடிய பாடலில், அஞ்சில் ஒன்று என்ற ஒரு தொடரின் மூலம்  ஐம்பூதங்களை அழகாக அடுக்கியுள்ளார்.

பஞ்சபூதங்கள் ஐந்து- நிலம் நீர் காற்று  ஆகாயம் நெருப்பு
 
 
அனுமன் "வாயுத்தேவன்"   பெற்ற மகன் என்பதால் - "அஞ்சிலே ஒன்று (காற்று) பெற்றான் "

கடலைத் தாண்டி இலங்கைக்கு சென்றவன் - "அஞ்சிலே ஒன்றைத் (நீர்) தாவி"

ராமனுக்காக வானத்தின் வழியாக பறந்துச் சென்று கடலைக் கடந்தான் - "அஞ்சிலே ஒன்று   (ஆகாயம்) ஆறாக  (வழியாக)ஆரியர்க்காக (ராமனுக்காக) ஏகி"

ஜனகர் சீதையை மண்ணில் கண்டு எடுத்தார் என்பதால் - நில அன்னை பெற்ற மகள் என்ற பொருளில்  - "அஞ்சிலே ஒன்று (நிலம்) பெற்ற அணங்கைக் கண்டு"

தன் வாலால் இலங்கைக்கு தீ வைத்தான் என்பதால் - "அஞ்சிலே ஒன்று (தீ) வைத்தான்"


வாயுதேவன் பெற்ற மகன்,  நிலமகளை காண, ஆகாயத்தின் வழியாக, நீரை தாண்டி, இலங்கைக்கு வந்து தீ வைத்தான்  என்று நயமாக ஐந்து பூதங்களையும் ஒரே சொல்லின் மூலம் "அஞ்சிலே ஒன்று " என்ற ஒரு வாக்கியம் கொண்டு விளக்குகிறார் கம்பர்.

இதை சொற்பின்வருநிலையணி என்ற அணி வகைப்படும். ஒரே சொல் அல்லது தொடர் ஒரு பாடலில் பல முறை வந்து வேவ்வேறு பொருள் தருவது. 

ஆக்கம்
தமிழ்ச்சுவடி

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி