09 Dec 2022

அளறு = சேறு,புதைக்குழி,நரகம்


மகரம் அளறு இடை புரள 

                    -திருப்புகழ்

                                                
மகரம் =மீன்கள் ;   அளறு =சேற்றின் ; இடை புரள  = நடுவே புரள 

ஒருமைச் செயல்ஆற்றும் பேதை எழுமையும் தான்புக்கு அழுந்தும் அளறு

                   -திருக்குறள்


எழுபிறப்பிலும் தான் அனுபவிக்க போகும்   நரகத்தினை;  ஒரு பிறப்பிலேயே முட்டாள்  தன் செயல்களால்   தேடிக் கொள்வான்.

  காண்டகு மென்றோட் கணிகைவா யின்சொல்லுந்
தூண்டிலின் உட்பொதிந்த தேரையும் – மாண்டசீர்க்
காழ்த்த பகைவர் வணக்கமும் இம்மூன்றும்
ஆழ்ச்சிப் படுக்கும் அளறு 

                  -திரிகடுகம் 


வஞ்சம் உடைய அழகிய பெண்ணின் சொல்லும் , தூண்டிலில் இருக்கும் தவளையும் , பகைவர் நமக்கு செலுத்தும் வணக்கமும் -  இம்மூன்றும் ஒருவனை ஏமாற்றி அதற்குள்ளேயே அழுத்தும் புதைக்குழி போன்றது. 
ஆக்கம்
தமிழ்ச்சுவடி

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி