18 Jun 2023

இவரைத் தெரியுமா? #4

  • காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள துள்ளம் (தண்டலம்)  என்ற ஊரில் பிறந்தவர். 

  • சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள வெஸ்லியன் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர்.

  • இந்தியாவிலேயே முதன் முதலாக சென்னையில் தொழிலாளர் சங்கத்தை  இவர் தொடங்கினார்.

  • தேசபக்தன், நவசக்தி  போன்ற பத்திரிக்கைகளில் ஆசிரியராக  நாட்டு விடுதலைக்கு தொண்டாற்றினார்.

  • தமிழ் மேடைப் பேச்சின் தந்தை என்று போற்றப்பட்டவர். காந்தியடிகள் தமிழகம் வந்த போதெல்லாம் அவரின் மேடைப் பேச்சை மொழிப்பெயர்த்தார்.

  • மு.வரதராசனார், கல்கி இவரின்  இலக்கிய வாரிசுகள். 

  • புதிய உரைநடையின் தந்தை என்றும் தமிழ் தென்றல் என்றும் போற்றப்பட்டவர். 

இவர் ......

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் அல்லது திரு. வி. க. (1883-1953)

காலம்: 26 – 08 -1883 முதல் 17 – 09 – 1953 வரை வாழ்ந்தார்.
பிறந்த இடம் : காஞ்சிபுரம் மாவட்டம், துள்ளம் (தண்டலம்).
பெற்றோர் பெயர்: விருத்தாசல முதலியார் மற்றும் சின்னம்மா.

திரு.வி.கலியாணசுந்தரனார் (திருவாரூர் விருத்தாச்சல மகனார் சுருக்கமே திரு.வி.க என்பது)
தொடக்கத்தில் தன் தந்தையிடம் கல்வி பயின்றார். பின்னர் சென்னையில்  வெஸ்லி பள்ளியில் சேர்ந்தார்.
மறைமலை அடிகளிடம் இலக்கியம் பயின்றார்.

தமிழ்மொழிப் பற்று
பிற மொழி கலப்பில்லாமல் தனித்தமிழில் பேசவும் எழுதவும் முடியும் என்பதை நிலைநிறுத்தினார்.
உரைநடை, கவிதை, பதிப்பு, மேடைப்பேச்சு, கட்டுரை, தொழிலாளர் நலம், பத்திரிக்கை என பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கினார்.       

திருவிக அவர்களின் படைப்புகள்:

உரைநடை நூல்கள்
முருகன் அல்லது அழகு, தமிழ்ச்சோலை, இளமை விருந்து ,மனித வாழ்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, தமிழ்த் தென்றல் போன்ற உரைநடை நூல்களை எழுதியுள்ளார். 

பாடல்கள்
முருகன் அருள் வேட்டல், சிவனருள் வேட்டல், திருமால் அருள் வேட்டல், கிறிஸ்துவின் அருள் வேட்டல், அருகன் அருகே போன்ற பல செய்யுட் பாடல்களை இயற்றியுள்ளார்.

சங்க இலக்கியங்கள்
சங்க இலக்கியங்கள் பற்றி திரு.வி.க இவ்வாறு அழைக்கிறார்

இயற்கை ஓவியம் = பத்துப்பாட்டு
இயற்கை இன்பக்கலம் = கலித்தொகை
இயற்கை வாழ்வில்லம் = திருக்குறள்
இயற்கை இன்பவாழ்வு நிலையங்கள் = சிலப்பதிகாரமும் மணிமேகலையும்
இயற்கைத் தவம் = சிந்தாமணி
இயற்கைப் பரிணாமம் = கம்பராமாயணம்
இயற்கை அன்பு = பெரியபுராணம்
இயற்கை இறையுறையுள் = தேவார திருவாசக திருவாய் மொழிகள்


சிறப்புப் பெயர்கள்
தமிழ் முனிவர், தமிழ் பெரியார், தமிழ்ச்சோலை, தமிழ் புதிய உரைநடையின் தந்தை, தமிழ் மேடைப்பேச்சின் தந்தை, தொழிலாளர் தந்தை, “தமிழ்த்தென்றல்” என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார்.

அவரின் நினைவாக ஷெனாய் நகரில் திருவிக பூங்கா அமைக்கப்பட்டது. பெரம்பூர் அருகே திரு.வி.க  அவர்களின் உருவச்சிலை நிறுவப்பட்டது. அண்ணா சாலையில் GP சாலைக்கு திரு.வி.க சாலை என்று பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் அறிய
https://www.tamilvu.org/library/nationalized/pdf/40-aa.sa.ganasampanthan/tiruveka.pdf














ஆக்கம்
தமிழ்ச்சுவடி

Subscribe below to get future posts from தமிழ்ச்சுவடி